For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரனைக் காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்திய யு.எஸ்... புதிய புத்தகத்தில் பரபர தகவல்

பிரபாகரனைக் காப்பாற்ற அமெரிக்கா பெரும் முயற்சித்தது என்றும் இதற்காக இலங்கையை மிரட்டவும் செய்தது எனவும் புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளை யுத்த களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற கடைசிநேரங்களில் அமெரிக்கா போராட்டம் நடத்தியதாக புதிய புத்தகம் ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகளை காப்பாற்ற அமெரிக்காவும், நார்வேயும் முயற்சித்தது; இதை இந்தியா எதிர்த்தது. இந்தியாவின் எதிர்ப்பை தமிழக தலைவர்களும் ஆதரித்தனர் என முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேமன் தம்முடைய புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.

New Book also confirsm US attempt to Save Prabhakaran

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரியும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியவருமான டயா கேமேஜ் "Tamil Tigers' Debt to America: US Foreign-Policy Adventurism & Sri Lanka's Dilemma" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்த நாட்களின் போது பிரபாகரன் மற்றும் தளபதிகளைக் காப்பாற்ற அமெரிக்கா பெரும் முயற்சி எடுத்தது குறித்து இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மண்டலங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் அமெரிக்கா எச்சரித்ததாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

ஒருகட்டத்தில் இலங்கை மீது சர்வதேச நிதியம் மூலமான நெருக்கடி தடைகளையும் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஏற்படுத்தி பணிய வைக்கவும் முனைந்தார் எனவும் அந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் என்னதான் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்திருந்தாலும் அந்த அமைப்பினால் அமெரிக்காவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கருதியது. அதே நேரத்தில் இலங்கையை இரண்டாக பிரிக்கவும் அமெரிக்கா விரும்பவில்லை. தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா விரும்பியது எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
One more Book on LTTE also confirme US attempted to save Prabhakaran in 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X