For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு தலா 12; காங்கிரசுக்கு 4 அமைச்சர்கள்

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு 12, காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர்கள் என மொத்தம் 28 அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டன.

Nitish is Bihar CM again, 28 ministers take oath

மொத்தம் இக்கூட்டணி 178 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 80, ஐக்கிய ஜனதா தளம் 71, காங்கிரஸ் 27 இடங்களைக் கைப்பற்றின.

அதிக இடங்களை ராஷ்டிரிய ஜனதா தளம் கைப்பற்றிய போதும் முதல்வர் நிதிஷ்குமார் என்பதில் லாலு பிரசாத் உறுதியாக இருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையிலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் சரிபாதியாக தலா 12 அமைச்சர்களையும் காங்கிரஸ் 4 அமைச்சர்களையும் பெற்றுள்ளன.

கட்சி வாரியாக இன்று பதவியேற்றோர் விவரம்:

ஐக்கிய ஜனதா தளம்: நிதிஷ்குமார், கபில்தேவ் காமந்த், விஜேந்தரா பிரசாத் யாதவ், மதன் சைனி, லாலன் சிங், ஜெய்குமார் சிங், ஷிரவண் குமார், மகேஸ்வர் ஹஜாரி, ஷைலேஸ் குமார், கிரிஷ் நந்தன் வர்மா, மஞ்சு வர்மா, குர்ஷீத் ஆலம்

ராஷ்டிரிய ஜனதா தளம்: தேஜஸ் யாதவ், தேஜ்பிரதாப், அப்துல்பாரி சித்திக், அலோக் மேத்தா, அனிதா தேவி, ஷிவ் சந்திரா ராம், சந்திரிகா ராய், ராம்விசார் ராய், சந்திரசேகர், விஜய் பிரகாஷ், அப்துல் கஃபார், முனேஷ்வர் செளத்ரி

காங்கிரஸ்: அசோக் செளத்ரி, மதன் மோகன் ஜா, அவ்தேஷ் சிங், அப்துல் ஜெயில் மஸ்தான்,

English summary
Cheered by over one lakh supporters, JD-U leader Nitish Kumar, who led the Grand Alliance to victory in assembly elections, on Friday took oath as the chief minister of Bihar at the head of a 28-member ministry of his party, RJD and Congress legislators.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X