திருப்பதி லட்டுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை.. மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் லட்டு மற்றும் பக்தர்களின் காணிக்கையான தலைமுடிக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி வரிமுறை வரும்ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இதன்மூலம் பல பொருட்களுக்கு 0-28 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிமுறையை பல்வேறு தரப்பினர் ஆதரித்தும் எதிர்த்தும் வருகின்றனர்.

 No GST for Tirupati Laddu

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கும், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தலை முடிக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என ஆந்திர பிரதேச நிதியமைச்சர் ராமகிருஷ்ணா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

 No GST for Tirupati Laddu

அக்கடிதத்தைப் பரிசீலித்த மத்திய நிதியமைச்சகம், திருப்பதி லட்டு மற்றும் தலைமுடிக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளித்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central finance ministry announced that it has given exemption to Tirupati laddu and hair.
Please Wait while comments are loading...