For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் எல்லையில் சுவர் எழுப்பும் திட்டமில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு!

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் சுவர் எழுப்பும் திட்டமில்லை என உள்துறை இணையமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய- பாகிஸ்தான் எல்லையில் சுவர் எழுப்பும் திட்டமில்லை என உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைதான் மத்திய அரசு செய்து வருவதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

அண்மையில் எல்லையில் சுவர் எழுப்படும் என்ற பேச்சு அமெரிக்காவில்தான் பெருமளவு அடிப்பட்டது. மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக மக்கள் குடியேறுவதை தடுக்கும் வகையில் அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் மிகப்பெரிய சுவர் கட்டப்படும் என அவர் அறிவித்தார். இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தது.

No plans to construct wall along Pakistan border: Govt tells Parliament

முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்று திரும்பிய பிறகு உள்துறை அமைச்சகம் இந்திய பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் வலிமையான சுவர் ஒன்றை கட்ட இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ ராஜ்யசபாவில் இன்று இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மத்திய அரசு பல பக்க அணுகுமுறையைதான் பின்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களை குவித்தல், எல்லை வேலி கட்டமைப்பு, எல்லை சாலைகள் கட்டமைப்பு, வெள்ள விளக்குகளை நிறுவுதல் ஹைடெக் கண்காணிப்பு உபகரணங்களை அறிமுகப்படுத்துதல், ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு படைக்கான சிறப்பு வாகனங்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தான் நடைபெற்று வருகிறது என்றும் மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

English summary
India has no plans to construct a wall along its border with Pakistan, Rajya Sabha was informed on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X