For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் 4-வது 'வந்தே பாரத் ரயில்'.. இமாசல பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Google Oneindia Tamil News

ஷிம்லா: இமாசல பிரதேச மாநிலத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4-வது வந்தே பாரத் ரயில் சேவை இது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று பிரதமர் மோடி மலைப்பிரதேசமான இமாசல பிரதேசம் சென்றார்.

குறிப்பாக இமாசல பிரதேசத்தில் உள்ள உனா ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது.

தேவர் குரு பூஜை.. யாரோ கிளப்பிவிட்டுட்டாங்க.. பிரதமர் மோடி வரவில்லைங்க.. அண்ணாமலை விளக்கம் தேவர் குரு பூஜை.. யாரோ கிளப்பிவிட்டுட்டாங்க.. பிரதமர் மோடி வரவில்லைங்க.. அண்ணாமலை விளக்கம்

மோடி தொடங்கி வைத்தார்

மோடி தொடங்கி வைத்தார்

அதன்படி இன்று காலை இமாச்சல பிரதேசம் சென்றடைந்த பிரதமர் மோடி, இமாசல பிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:- உனா மற்றும் இமாசல பிரதேசத்திற்கு தீபாவளி பண்டிகை முன்கூட்டியே வந்துவிட்டது. வந்தே பாரத் ரயில் சேவையை இன்று நான் துவக்கி வைத்தேன். நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4-வது வந்தே பாரத் ரயில் சேவை இதுவாகும்.

பல சவால்களை முறியடித்து

பல சவால்களை முறியடித்து

கிராமப்புற சாலை மேம்பாடு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பது உள்ளிட்டவற்றோடு டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதை இந்த அரசு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறது. கடந்த கால சவால்களை முறிடியடித்து வேகமாக வளர்ந்து புதிய இந்தியா வருகிறது. இவ்வாறு அவர் பேசினார் .

4-வது ரயில்

4-வது ரயில்

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் 52 நொடிகளில் 100 கி.மீட்டர் வேகத்தை எட்டும். வந்தே பரத் ரயில் இமாசல பிரதேச்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் சுற்றுலாத்துறை மேம்படும். சொகுசான மற்றும் வேகமான பயணத்தை சுற்றுலாப்பயணிகளுக்கு அளிக்கும். நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 4-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். ஏற்கனவே புதுடெல்லி - வாரணாசி, புது டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா மற்றும் காந்தி நகர் - மும்பை இடையே ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு வசிதிகள்

பல்வேறு வசிதிகள்

புதிய வந்தே பாரத் ரயிலில் சாய்வு இருக்கைகள், தீ விபத்தை கண்டறியும் தானியங்கி சென்சார்கள், சிசிடிவி கேமராக்கள், வைஃபை வசதி, 3 மணி நேரம் வரை தாங்கும் பேட்டரி பேக் அப் வசதி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களளை தயாரிக்க ஐசிஎப் தொழிற்சாலை இலக்கு நிர்ணயித்துள்ளது.

நவம்பரில் தேர்தல்

நவம்பரில் தேர்தல்

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் இமாசல பிரதேசத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பிரதமர் மோடியின் இன்றைய பயணம் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Prime Minister Modi is on a tour of Himachal Pradesh today, where he inaugurated the Vande Bharat train service. Prime Minister Modi has said that this is the 4th Vande Bharat train service introduced in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X