என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். - தமிழில் வாழ்த்திய பிரதமர் மோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ் மக்கள் இன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாடும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டை யொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

PM Modi wishes tamils for the tamil new year

ஏராளமான மக்கள் கோயில்களிலும் வீடுகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும் என தமிழில் டிவிட் செய்துள்ளார்.

புத்தாண்டையொட்டி கேரளா, ஒடியா மக்களுக்கு விஷூ, மகா விஷூப சங்கராந்தி வாழ்த்துகளையும் பிரதமர் மோடி அவரவர் மொழிகளில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மக்களுக்கும் பிரதமர் மோடி போஹாக் பிகு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PM Modi wishes tamils for the tamil new year in tamil on twitter.
Please Wait while comments are loading...