பணமதிப்பிழப்பு குறித்த கருத்துக்கணிப்பில் பங்கு கொள்ளுங்கள் - மக்களுக்கு ட்விட்டரில் மோடி அழைப்பு

Subscribe to Oneindia Tamil
  ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு குட் பை சொன்ன நாள் இன்று...வீடியோ

  டெல்லி : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இன்றோடு ஓர் ஆண்டு ஆகிறது. இந்நிலையில் இதுகுறித்து மக்களின் கருத்துகளை அறிய கருத்துக்கணிப்பு ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

  பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்த மோடி அரசின் மிகப்பெரிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த ஒரு அரசும் புழக்கத்தில் இருக்கும் 86% நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது இல்லை. கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ளநோட்டுகளை ஒழிக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

  PM Narendra Modi Asks people of India to Join in the Survey Regarding Note Ban

  இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த திட்டமாக இதை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இன்றோடு ஒரு ஆண்டு கடந்த நிலையில், இந்த நாளை கருப்புப் பண ஒழிப்பில் முக்கிய நாளாக பா.ஜ.க அரசு கொண்டாடி வருகிறது.

  இந்நிலையில், பிரதமர் மோடி மக்களுக்கு ட்விட்டரில் நன்றி சொல்லி உள்ளார். இந்தியாவின் 125 கோடி மக்களும், கருப்புப் பணம் என்னும் கொடிய அரக்கனுக்கு எதிராகப் போராடி வெற்றி அடைந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

  இதை எதிர்கட்சிகள் தோல்வி அடைந்த நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்தை மொத்தமாக சீர்குலைத்த செயல் என்று கூறி இன்று கருப்புநாளாகக் கடைபிடித்து வருகிறார்கள். ஆனால், இந்த நடவடிக்கை வெற்றியே என்று கூறி விளக்கும் புள்ளிவிபரங்களோடு கூடிய குறும்படம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டு இருக்கிறார்.

  அதோடு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்று தாம் அறியப்போவதாகவும் அதற்கு ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட இருக்கிறது என்றும், மக்கள் அதில் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  PM Narendra Modi asks people of India to join in the survey regarding Note Ban And also Thanks people for supporting this biggest econamic Reform.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற