காவ்யா மாதவன் தொடர்ந்து தலைமறைவு... தேடும் கேரள போலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பாவனா கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவனையும் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

ஆனால் காவ்யா தனது தாயாருடன் தலைமறைவாகியுள்ளதால், போலீசாரால் இதுவரை கைது செய்ய முடியவில்லை.

Police searching Kavya Madhavan

பாவனா கடத்தலில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் 2 ஆதாரங்கள் போலீசாரிடம் உள்ளனவாம். இதைத் தெரிந்து கொண்ட காவ்யா, திலீப் கைதுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பே தனது தாயாருடன் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். இன்று வரை அவர் வீடு திரும்பவில்லை. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

கேரளா முழுவதும் தேடி வருகின்றனர் போலீசார். அதே நேரம் அவர் விமானம் மூலம் எங்கும் வெளியூருக்குப் போகவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Kavya Madhavan Know Pulsar Suni For Years | Oneindia Malayalam

பாவனாவைக் கடத்திய முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிதான் காவ்யா மாதவனுக்கு எதிரான ஆதாரங்களை போலீசாருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kavya Madhavan is still not comes out from his hiding place. Kerala Police serching the actress in Bhavan case.
Please Wait while comments are loading...