"மக்கள் தொகை ஆர்மி.." முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனம் சப்ளை- அசாம் முதல்வரால் சர்ச்சை
குவஹாத்தி: முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனைகளை வினியோகம் செய்ய மக்கள் தொகை ராணுவம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள உத்தர பிரதேச மாநிலத்திலும் மக்கள் தொகை குறைப்பு தொடர்பாக புதிய கொள்கையை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொண்டு வந்துள்ளார்.
முஸ்லீம்களை சீண்டும் வகையில் இந்த கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஒரு மதத்தினரை குற்றம்சாட்டவே இது பயன்படும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அசாம் பாஜக ஆட்சி
அசாமை பொறுத்தளவில், சமீபத்தில் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. வந்ததும் வராததுமாக முஸ்லீம்கள் தொடர்பான விஷயங்களில் சீண்டுதலை ஆரம்பித்துள்ளது. இதற்கு பாப்புலேஷன் ஆர்மி என்ற இந்த திட்டமும் ஒரு காரணம். இதன்படி 1000 பேர் கொண்ட குழு முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பல கட்ட பணிகள்
இந்த குழு, கருத்தடை சாதனங்களை மக்களிடையே வினியோகம் செய்யும். மக்கள் தொகை அதிகரிப்பு கூடாது என்று கூறி, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளது. இது தவிர ஆஷா என அழைக்கப்படும், அங்கீகரிக்கப்பட்ட சமூக ஆரோக்கிய பணியாளர்களை கொண்டும் மக்கள் தொகை பற்றி பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

முஸ்லீம் மக்கள் தொகை இலக்கு
இது தொடர்பாக சட்டசபையிலேயே அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர். "அசாமில் இந்துக்களிடையே மக்கள்தொகை வளர்ச்சி 2001 முதல் 2011 வரை 10 சதவீதமாக இருந்தால், அது முஸ்லிம்களிடையே 29 சதவீதமாக இருந்தது" என்று முதல்வர் கூறியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி
அவர் மேலும் கூறுகையில் "குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தியதன் காரணமாக, அசாமில் இந்துக்களின் வாழ்க்கை முறை மேம்பட்டுள்ளது. சொந்தமாக பெரிய வீடுகள் மற்றும் வாகனங்கள் உள்ளன. இந்துக்களின் குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்களாக மாறுகிறார்கள்." என்று முதல்வர் கூறியுள்ளார்.

விமர்சனங்கள்
"அதிக மக்கள் தொகையின் சுமை காரணமாக மேற்கு மற்றும் மத்திய அசாம் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் "அப்பர்" அசாம் மக்களுக்கு தெரியாது" என்றும் முதல்வர் கூறியுள்ளார். அதிக மக்கள் தொகை கொண்ட இந்த பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைக்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications