ஸ்டீபன் ஹாக்கிங் விடாமுயற்சியாளர்: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்தார். அவருக்கு வயது 76. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகள் செய்து இருக்கிறார்.

President and PM condolences for demise of Stephen Hawking

சக்கர நாற்காலியில் அவரது வாழ்க்கை முடங்கினாலும் விடா முயற்சியால் தனது ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. அவரது புத்தி கூர்மை நமது உலகத்தையும் பிரபஞ்சத்தையும் மர்மம் விலகிய இடங்களாக வைத்தன. அவரது விடா முயற்சியும் தைரியமும் வருங்கால தலைமுறைக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ஸ்டீபன் ஹாக்கிங் மிக சிறந்த விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் ஆவார். அவரது விடா முயற்சி உலக மக்களை ஈர்த்தது. அவரது மரணம் கவலையை அளிக்கிறது.

ஹாக்கிங்கின் முன்னோடி பணிகள் நமது உலகை சிறந்த நிலைக்கு கொண்டு சென்றது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President Ramnath Govind and PM Narendra Modi condolences for demise of Stephen Hawking.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற