என்ன விளையாடுறீங்களா? சசிகலாவுக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: குற்றவாளி சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சசிகலாவைக் கண்டித்தும் டிஐஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் சமூக வலைதளங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் குற்றவாளி சசிகலா கைதி என்ற சுவடே இல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். கைதிக்கான உடையை அணியாமல் தன்பாட்டுக்கு நைட்டியுடன் சிறைக்குள் வலம் வந்துள்ளார் சசிகலா.

இந்த தில்லுமுல்லுகளை வெளி உலக்கு காட்டிய ரூபா போக்குவரத்துத்துறைக்கு தூக்கியெறிப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து சமூகவலைதளங்களில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பணத்துக்காகதான்..

பணத்துக்காக தான் சட்டமும் அரசும் இயங்குகிறது என்பதற்கு சசிகலாதான் சிறந்த உதாரணம் என்கிறார் இந்த நெட்டிசன்

அதிகாரி மாற்றம் அவமானம்

சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வசதிகளை வெளிப்படுத்திய போலீஸ் அதிகாரி மாற்றப்பட்டிருப்பது உங்களுக்கு அவமானம் என்கிறது இந்த ட்வீட்

என்ன விஐபி..

என்ன விஐபி.. சிறைக்கு போய்விட்டாலே எல்லா குற்றவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தப்பட வேண்டும்.. ஊழல் இந்தியாவில் சிறப்பாக உள்ளது.. என்கிறார் இந்த நெட்டிசன்

பணம் தான் எல்லாம்

டிஐஜி ரூபா போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை வெளிக்காட்டியதற்காகவா? பணம் தான் எல்லாம் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.. உங்களுக்கு அவமாம் என்கிறார் இந்த நெட்டிசன்..

மற்றொரு அப்பல்லோ

பெங்களூரு ஜெயில் மற்றொரு சென்னை அப்பல்லோ மருத்துவமனை.. என்கிறது இந்த டிவீட்

Thirumavalavan Speech About Sasikala -Oneindia Tamil

என்ன விளையாடுகிறீர்களா?

சிறை ஒழுங்கீனங்களை வெளிப்படுத்திய ரூபா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.. என்ன விளையாடுகிறீர்களா? என அரசைக் கேட்கிறது இந்த மீம்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
public shows anger on Sasikala and Karnataka govt through social media for Roopa's transferred. public says money can do anything on Sasikala VIP in jail issue.
Please Wait while comments are loading...