பஞ்சாப் சட்டசபை தேர்தல்: சீக்கியர்களை கவர பா.ஜ.க கையில் எடுக்கும் அதிரடி வியூகங்கள்.. எடுபடுமா?
சன்டிகர்: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்ற பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது.
கடந்த தேர்தலில் ஷிரோமணி அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக இந்த முறை தேர்தலை தனியாக சந்திக்க இருக்கிறது.

விவசாயிகள் எதிர்ப்பு
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து உட்கட்சி பூசலில் ஈடுபட்டு வருவது பா.ஜக.வு.க்கு ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் பா.ஜ.க அங்கு வெற்றி பெறுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஏனெனில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக பெரும் அரண் போல் நிற்கின்றனர். வேளாண் சட்டத்தை மத்திய பாஜக அரசு கண்டு கொள்ளாததால் பஞ்சாப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக பிரசாரத்தை விவசாயிகள் தொடங்கி விட்டனர்.

பா.ஜ.க வியூகம்
பஞ்சாப்பில் பா.ஜ.க தலைவர்கள் எந்த கூட்டத்தை நடத்தினாலும் முதல் ஆளாக எதிர்ப்பதற்கு சென்று விடுகின்றனர் விவசாயிகள். இந்த எதிர்ப்பையும் மீறி பஞ்சாப்பில் வெற்றி பெற சில வியூகங்களை அமைத்து வருகிறது. அதாவது பஞ்சாபில் மிக அதிகம் உள்ள சீக்கிய சமூகத்தை குறி வைத்து பாஜக காய் நகர்த்தி வருகிறது. நேற்று முதல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக முறையாக தொடங்கி இருக்கிறது.

முகாமிருக்கும் மத்திய அமைச்சர்கள்
பஞ்சாபில் முகாமிருக்கும் மத்திய அமைச்சர்கள் சிலர் சீக்கியர்கள் மற்றும் பஞ்சாபியர்களுக்காக மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை எடுத்துரைத்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கோஷ்டி மோதலையும், நவ்ஜோத் சித்து உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்களது தனிப்பட்ட பிரச்சினைக்காக பஞ்சாபின் உண்மையான பிரச்சினைகளை புறக்கணிப்பதாக சீக்கியர்கள் மனதில் அமைச்சர்கள் பதிய வைத்து வருகின்றனர்.

கர்தார்பூர்-சாஹிப் வழித்தடம்
இதேபோல் கர்தார்பூர்-சாஹிப் வழித்தடத்தை விரைவில் திறந்து வைத்து சீக்கியர்கள் மனதை குளிரவைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. கர்தார்பூர்-சாஹிப் சாலை என்பது இந்தியா-பாகிஸ்தான் எல்லையை எல்லையில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்புடன் இணைக்கும் சுமார் 5 கி.மீ தூரம் கொண்ட சாலையாகும். இந்த குருத்வாராவில் வழிபட வேண்டும் என்பதை ஒவ்வொரு சீக்கியர்களும் விரும்புவார்கள். குருத்வாரா பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.

மோடி அரசு எடுத்துள்ள திட்டங்கள்
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள இந்த வழித்தடத்தை திறந்து வாக்கு வங்கியாக பயன்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. 'நவ பஞ்சாப் பாஜ்ப தே நாள்' என்ற தேர்தல் முழக்கத்துடன் பஞ்சாப் மக்களுக்காக மோடி அரசு எடுத்துள்ள திட்டங்களை விளம்பரப்படுத்தும் பிரசாரத்தை பாஜக கையில் எடுக்க இருக்கிறது. 1984 கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு பாஜக நீதி வழங்கியுள்ளது.; தாய்நாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படாத தடுப்புப்பட்டியலில் உள்ள சீக்கியர்கள் கருப்பு பட்டியல் நீக்கப்பட்டதால் இப்போது எளிதாக இந்தியாவுக்கு வர முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கூறி சீக்கியர்களை கவர உள்ளதாக பஞ்சாப் பாஜக தேர்தல் பொறுப்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியுடன் கூறுகிறார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications