For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறவேண்டி, இந்து சேனா பிரார்த்தனை! ஏன் தெரியுமா?

By Jeyarajaseker A
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறப்பது போல அமெரிக்காவிலும் தேர்தல் களம் அதிரடியாக வெடிக்க ஆரம்பித்துள்ளது. நாட்டின் 45வது அதிபரை தேர்வு செய்யவிருக்கும் அமெரிக்க மக்களுக்கு தாங்கள் தேர்வு செய்ய பல வேட்பாளர்கள் இருந்த போதும் இருவரின் மீது மட்டுமே அதிக கவனம் திரும்பியிருக்கிறது.

ஜனநாயக கட்சியின் சார்பில் ஹில்லாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்பும் அமெரிக்கர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளனர். டொனல்ட் ட்ரம்ப் அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்தலில் பெரிய விசயம் ஒன்றுமில்லை. ஆனால், டொனால்ட் ட்ரம்ப்-ஐ நம் நாட்டு அமைப்பு ஒன்று விரும்ப ஆரம்பித்திருப்பதும், அவருடைய வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருவதும்தான் ஆச்சரியம்.

Republican frontrunner Trump is the saviour, says Hindu Sena

இந்தியாவில் உள்ள இந்து சேனா என்ற அமைப்பினர் அடுத்த அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வர வேண்டும் என்று இங்கிருந்தே பிரார்த்திக்க தொடங்கி விட்டனர். இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்து மனித குலத்தை காக்க வந்த மாணிக்கம் இவர்தான் என இந்து சேனா அமைப்பினர் நம்புகின்றனர்.

"இஸ்லாமிய தீவிரவாதம் உலகை அளிக்க வந்த புற்றுநோய். இந்த நோயால் இந்தியா வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது. ட்ரம்ப்புக்கும் இதே எண்ணம் உள்ளதாலேயே அவரை எங்களது கதாநாயகனாக பார்க்கிறோம்" என்று இந்து சேனா அமைப்பின் தலைவர் குப்தா கூறுகிறார்.

டெல்லி ஜந்தர் மாந்தரில் கூடிய இந்து சேனா அமைப்பினர், தொழிலதிபரும், கோடீஸ்வரருமான டொனால்ட் ட்ரம்புக்கே தங்கள் ஆதரவு என்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சி 1 மணி நேரம் நீடித்தது.

இந்நிகழ்ச்சியில் கடவுள் ட்ரம்புக்கு ஆசியை வழங்க வேண்டும் என்ற பிரார்த்தனையும், அவரே அடுத்த அமெரிக்க அதிபராக வரவேண்டும் என்ற பிரார்த்தனையும் நடைபெற்றது

இஸ்லாமியர்களை ஏன் எதிர்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு கடும் கோபத்துடன் பதிலளித்த குப்தா ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திலும் ஜெய்ஷ்-இ-முஹமத் இயக்கத்திலும் யார் இணைகிறார்கள்? இந்துக்களும், கிறிஸ்தவர்களுமா இணைகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். ட்ரம்ப் அவர்களை எதிர்க்க எண்ணுகிறார், என்றார் அவர்.

நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் நிச்சயமாக அமெரிக்க அதிபராவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் இந்து சேனா உறுப்பினர்கள் தங்களது இதய பூர்வமான ஆதரவை ட்ரம்ப்புக்கு தெரிவிக்க பல்வேறு நிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் ஐ பிடிக்கவில்லை என்றாலோ அவரது இஸ்லாமிய எதிர்ப்பு அமெரிக்கர்களுக்கு ஏற்புடையது இல்லையென்றால் அவர் எப்படி தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பார் என்று கேள்வி எழுப்பும் இந்து சேனா அமைப்பினர், ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டனை அமெரிக்கர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் கூறினர்.

மதசார்பின்மையை வலியுறுத்தும் ஹில்லாரி இஸ்லாமியர்களை குறித்து எதுவும் பேசுவதில்லை. ஆனால் ட்ரம்ப்பிடம் மட்டுமே இஸ்லாமியர்களை எதிர்ப்பதற்கான திட்டம் உள்ளது என்று கூறும் குப்தா, சர்வதேச சமூகம் ட்ரம்ப்பை ஆதரிக்க வேண்டும் அதற்காக இந்தியப் பிரதமர் சர்வதேச நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப் போவதாகவும் கூறினார்.

அதேநேரம், உலக சூபிகள் மாநாட்டில், இஸ்லாம் அமைதிக்கான வழி என்று பேசிய மோடியின் பேச்சுகள் தன்னை ஏமாற்றம் அடையச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

English summary
Hindu Sena members prays for American Republican frontrunner Donald Trump. They says he is the only saviour for humanity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X