For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விபச்சார வழக்கில் ரஷ்மி நாயரை கைது செய்ததே தப்பாமே

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஆள்கடத்தல் மற்றும் விபச்சார வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள, மாடல், ரஷ்மி நாயர் செய்தது தப்பு கிடையாது என கேரளாவில் பல முற்போக்கு ஆர்வலர்கள் குரல்கள் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

இந்த குரல்களை எழுப்புபவர்களில், ஒருவர்தான் பத்திரிகையாளரான லால் டேனி. இதுகுறித்து அவர் சில பாயிண்டுகளை முன்வைத்து பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:

முதலில், ஒரு விஷயத்தை பார்க்க வேண்டும். இந்தியாவில் இருநபர்கள் ஈடுபடும் விபச்சாரம் என்பது குற்றம் கிடையாது.

குற்றமேயில்லை

குற்றமேயில்லை

இரு நபர் சம்மதத்தோடு உறவு கொள்வதை விபச்சாரம் என்று அழைக்க முடியாது. இதை ஒரு தொழிலாக மாற்றி மூன்றாவது நபர் நுழைந்திருந்தால்தான் அது விபச்சாரம் என்று அழைக்கப்படும். விபச்சார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

10 ரூபாய்

10 ரூபாய்

இரு நபர்கள் உடலுறவு கொள்வதை, பொது இடத்தில் வைத்துக்கொண்டால்தான் அது குற்றச்செயல். அப்படியும், தற்போதுள்ள சட்டத்தில், கையும், களவுமாக பிடிபட்டால் 10 ரூபாய்தான் அபராதமாக விதிக்க முடியும்.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

விபச்சாரம் ஹோட்டலில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நடந்தபோது ரஷ்மி நாயர் அங்கு இல்லை என ஆவணங்கள் கூறுகின்றன. வாட்ஸ்அப்பில் ஆபாச படங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நாயர் ஒரு மாடல். அவர் ஆபாச கோலத்தில் கொடுத்த போஸ்களை அனுப்பி வைப்பது குற்றமாகாது.

பேஸ்புக்

பேஸ்புக்

ரஷ்மி நாயரும், அவரது கணவரும், சிறுமிகளின் நிர்வாண படங்களை போட்டு, பேஸ்புக் பக்கம் நடத்தியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அந்த பேஸ்புக் பக்கத்தை நடத்தியதற்காக, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், அதை லைக் செய்து பேஸ்புக் பக்கத்தின் ஃபாலோவர்களாக இருந்த ஆயிரக்கணக்கானோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடத்தல்

கடத்தல்

இந்த வழக்கில் உருப்படியாக கூறப்படும் குற்றச்சாட்டு என்பது, சிறுமிகள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுவது மட்டுமே. ஆனால், கடத்தலுக்கு உள்ளானவர்கள் தரப்பில் இருந்து இதுவரை புகார் தரப்படவில்லை என்பதால், அதிலும் ஆட்டம் உள்ளது.

பழி தீர்ப்பு

பழி தீர்ப்பு

ரஷ்மி நாயர் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, இதற்கு முன்பும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அவர் விசாரித்த பல வழக்குகள் ஜோடிக்கப்பட்டவையாக இருந்துள்ளன. 'கிஸ் ஆப் லவ்' போராட்டம் நடத்தியதால்தான், கலாச்சார காவலர்களுக்கு ரஷ்மி மீது கோபம் இருந்தது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் மீது பழி சுமத்தப்படுகிறது. இவ்வாறு நீள்கிறது அவரது பார்வை.

English summary
Reshmi Nair is not a criminal... Why? Lal Deni writes on his Facebook wall
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X