For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் 99% பேர் இந்தியாவுடன் இணைய விருப்பம்: முஸ்லிம் மத குரு கருத்து

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தினால் 99% பேர் இந்தியாவுடன் இணையவே விரும்புவர் என்று முஸ்லிம் மத குருவான மவுலானா சயீத் அக்தர் தெஹ்லவி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமைதி மற்றும் மத நல்லிணக்கத்துக்காக செயல்படும் அஞ்சுமன் மின்கஞ்ச் இ ரசூல் என்ற அமைப்பின் தலைவரான மவுலானா சயீத் அக்தர் தெஹ்லவி கூறியுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் இப்போது இல்லை. அந்த மக்களைப் பொறுத்தவரையில் நல்ல அரசு, வளர்ச்சித் திட்டங்களையே எதிர்பார்க்கின்றனர்.

Residents of PoK would love to Join India: Muslim cleric

ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் மூழ்கிய போதுதான் இந்திய ராணுவத்தையே அந்த மக்கள் புரிந்து கொண்டனர். இப்போது இந்திய ராணுவத்தை அந்த மக்கள் புகழ்கின்றனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இப்போது பொதுவாக்கெடுப்பு நடத்தினாலும் அந்த மக்களில் 99% பேர் இந்தியாவுடன் இணையவே விரும்புவர்.

பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறார். அல்கொய்தா உட்பட எந்த் ஒரு தீவிரவாத இயக்கத்தையும் ஒருபோதும் அஞ்சுமன் இயக்கம் ஆதரிக்காது.

இவ்வாறு மவுலானா சயீத் அக்தர் தெஹ்லவி தெரிவித்தார்.

English summary
The chairman of Anjuman Minhaj-e- Rasool, an Islamic organisation working for peace and communal harmony, today said that if given a chance the residents of Pakistan-occupied Kashmir (PoK) would love to join the Union of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X