இனி முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் 50.5% மருத்துவ சீட்… 49.5 % பின்தங்கிய மாணவர்களுக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய அளவில் மருத்துவ சேர்க்கையில் பொதுப் பிரிவில் உள்ள 50.5 சதவீத இடஒதுக்கீட்டை அப்படியே உயர் சாதி மாணவர்களுக்கான இடஓதுக்கீடாக மாற்றம் செய்ய சதித் திட்டம் இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திய அளவில் 49.5 சதவீதம் பிற்படுத்தப்பட்ட, எஸ்,சி, எஸ்.டி மாணவர்களுக்கான இடஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. மீதியுள்ள 50.5 சதவீதம் இடத்தில் பொதுப் பிரிவு மாணவர்கள் அனைவரும்
சேர்க்கப்படுவார்கள். இதில் எந்த பிரிவை சார்ந்த மாணவர்களும் தரவரிசையில் முதன்மை பெற்றிருந்தால் அவர்களுக்கு இந்தப் பிரிவில் இருந்தே இடம் ஒதுக்கப்படும். இதனால் இடஒதுக்கீடு அடைப்படையில் இடம் வழங்கப்படும் இன்னொரு மாணவர் பலன் பெறுவார்.

இடஓதுக்கீடு

இடஓதுக்கீடு

இதன் பிறகு 49.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

கபளீகரம்

கபளீகரம்

ஆனால் இந்த முறை பொதுப் பிரிவில் வரும் 50.5 சதவீத இடத்தை முற்றிலுமாக முன்னேறிய உயர் சாதி மாணவர்களுக்கு மட்டும் வழங்கும் திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவெடுத்து நடைமுறை படுத்த முயன்று வருகிறது. இதனால், பிசி, எஸ்,சி, எஸ்,டி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

பி.சி. எஸ்.சி. எஸ்.டி மாணவர்கள் பாதிக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம் என்கிறார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத். இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், ஆனால் மத்திய அரசு உரிய பதில் அளிக்க மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜக தீவிரம்

பாஜக தீவிரம்

மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் மாணவர்களின் நலன் காக்க அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். மத்திய அரசு தற்போது பொதுப் பிரிவு மாணவர்களுக்கும் இந்திய அளவில் தரவரிசையை கொடுத்து அதன் மூலம் இடஒதுக்கீட்டை காலி செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனை நடைமுறைபடுத்த விடமாட்டோம் என்று ரவீந்திரநாத் உறுதியாக கூறியுள்ளார். இதற்கான போராட்டத்தை அவர் சார்ந்த அமைப்பு முன்னெடுக்க உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The BJP Governement is trying to change reservation quota system in medical admisstion.
Please Wait while comments are loading...