இன்று ஒரு நாள் மட்டுமே பழைய 500 நோட்டு செல்லும்.. மத்திய அரசு திடீர் பல்டி... மக்கள் பேரதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது என மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 15ஆம் தேதி வரை செல்லும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இன்று ஒருநாள் மட்டுமே செல்லும் என மத்திய அரசு மாற்றம் செய்து அறிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதைத்தொடர்ந்து மின் கட்டணம் செலுத்த மற்றும் பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது. டிசம்பர் 15ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

Rs 500 old notes can be used in petrol bunks until tomorrow : central govt

இந்நிலையில் பெட்ரோல் பங்குகளில் இன்று வரையே பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியும் எனவும் இதேபோல் விமான டிக்கெட்டுகளும் பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தி டிக்கெட் பெறுவதற்கும் இன்றே கடைசி நாள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் இன்னும் பணத் தட்டுப்பாடு தீராத நிலையில், பழைய நோட்டுகளுக்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வழங்கப்பட்ட அவகாசத்தையும் அரசு தடாலடியாக, அடாவடியாக குறைத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Petrol bunks will accept Rs 500 old notes till tomorrow the central government has announced today. similarly to get flight tickets the Rs 500 old notes can be used until tomorrow.
Please Wait while comments are loading...