For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாரதா சிட் பண்ட் மோசடி: முன்னாள் மத்திய அமைச்சர் அபு ஹசீம் கானிடம் சிபிஐ கிடுக்குப்பிடி விசாரணை!

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. அபு ஹசீம் கானிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று கிடுக்குப் பிடி விசாரணை நடத்தினர்.

Saradha scam: CBI grills Congress MP Abu Hasem Khan Chowdhury

17 லட்சம் பேரிடம் ரூ6,600 கோடி பணம் பெற்றது சாரதா சிட் பண்ட் நிறுவனம். ஆனால் இந்த பணத்தை பல்வேறு அரசியல்வாதிகள் கடனாக வாங்கிக் கொண்டு திருப்பித் தராத நிலையில் முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.

இந்த மோசடி தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட அஸ்ஸாம் முன்னாள் டிஜிபி கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தொடர்ந்து அரசியல் பிரமுகர்களை சிபிஐ விசாரணைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்..பியுமான அபு ஹசீம் கானிடம் கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகள் இன்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

English summary
Senior Congress leader and former union minister Abu Hasem Khan Chowdhury Monday appeared before the Central Bureau of Investigation (CBI) after being summoned in connection with the multi-crore-rupee Saradha scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X