For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானை பாராட்டியும், இந்தியாவை இகழ்ந்தும் பேச்சு.. மணி சங்கர் அய்யருக்கு எதிராக தேச துரோக வழக்கு

பாகிஸ்தானை பாராட்டியும், இந்தியாவை இகழ்ந்தும் பேசியதாக மணி சங்கர் அய்யருக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கோட்டா: பாகிஸ்தானை பாராட்டியும், இந்தியாவை இகழ்ந்தும் பேசியதாக மணி சங்கர் அய்யருக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குஜராத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மணி சங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே கண்டித்து அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்.

Sedition case filed against Mani Shankar Aiyar in Kota

இந்நிலையில் கராச்சியில் நடந்த 9-ஆவது கராச்சி கலாச்சார விழாவில் கடந்த 11-ஆம் தேதி மணி சங்கர் அய்யர் கலந்து கொண்டார். அப்போது இந்தியாவுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விரும்பியும் இந்தியா அதில் அக்கறை கொள்ளவில்லை.

எனக்கு பாகிஸ்தான் மிகவும் பிடிக்கும். அதேபோல் பாகிஸ்தானியர்களுக்கும் என்னை பிடிக்கும். இந்த அதீத அன்பு அளவுக்கு எனக்கு இந்தியாவில் வெறுப்புதான் கிடைத்தது என்று அவர் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து பாஜகவின் கோட்டா மாவட்டத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர் அசோக் சௌத்ரி, மணி சங்கர் அய்யருக்கு எதிராக தேச துரோக வழக்கை பதிவு செய்துள்ளார். அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மணி சங்கர் பேசியது எனது தேசப்பற்றை பாதித்துள்ளதாக அசோக் சௌத்ரி தெரிவித்துள்ளார். மணி சங்கர் அய்யர் கூறிய கருத்துகள் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரித்து இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தும் போதும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் முறையான பதிலடி கொடுக்கும் போது கூறப்பட்டுள்ளன என்றும் அசோக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு கோடா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

English summary
A case of sedition and defamation against Mani Shankar Aiyar was filed for expressing love and praise for Pakistan and insulting India at the 9th Karachi Literature Festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X