For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சொத்து குவிப்பு வழக்கை ஜூனியர் நீதிபதிகள் விசாரித்தது ஏன்? நீதிபதி செல்லமேஸ்வர் பகீர் புகார்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு குறித்து மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஜூனியர் நீதிபதிகள் விசாரித்தது ஏன்? என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் போர்க்குரல் எழுப்பினர். இந்திய வரலாற்றிலேயே தலைமை நீதிபதிக்கு எதிராக இதுதான் முதல் முறை.

Selective Allocation Of Cases doubts On SC Integrity, Says Justice Chelameswar

இதனால் தலைமை நீதிபதியை நீக்கும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. இந்த நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறியதாவது:

உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக வழக்குகள் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக சந்தேகம் இருக்கிறது. ஏனெனில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜூனியர் நீதிபதிகள்தான் விசாரித்தனர். இதற்கு நான் கடும் எதிர்ப்பும் தெரிவித்தேன்.

ஆனாலும் ஜூனியர் பெஞ்ச்தான் விசாரித்தது. அதுவும் ஜெயலலிதா இறந்த பிறகு தீர்ப்பு அளித்தது. இதனால் என்ன பயன்? விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் வழக்குகளை ஒதுக்கினால் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை பாதிக்கும்.

ஜூன் 22-ந் தேதி ஓய்வு பெற உள்ளேன். அதன் பின் அரசு தரும் எந்த ஒரு பதவியையும் ஏற்கப் போவது இல்லை. இவ்வாறு நீதிபதி செல்லமேஸ்வர் கூறியுள்ளார்.

English summary
Justice Jasti Chelameswar, said the selective allocation of cases casts doubt on the integrity of the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X