For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2022க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்குகளை அடைய உறுதியேற்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்!

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்குகளை அடைய உறுதியேற்க வேண்டும் என சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்குகளை அடைய உறுதியேற்க வேண்டும் என சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 71வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் உரையை ஆற்றினார்.

Set New India Goals that the nation aims to achieve before 2022 : President Ram Nath Kovind

அப்போது அரசு சட்டங்களை இயற்றி வலுப்படுத்தினாலும் அதை கடைபிடிக்க வேண்டியது மக்களின் கடமை என் அவர் கூறினார். நாட்டின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன் பட்டுள்ளோம் என்றும் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.

சுதந்திர தின நாளில் விடுதலைக்காக போராடியவர்களை நாம் போற்றுவோம் என்றும் அவர் கூறினார். பல கட்ட போராட்டங்களுக்கு பின்னரே சுதந்திரத்தை பெற்றுள்ளோம் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி மசோதாவை மக்கள் முழுமனதோடு ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார். மேலும் புதிய இந்தியாவை உருவாக்கும் இலக்கை 2022ஆம் ஆண்டுக்குள் அடைய நாம் உறுதி ஏற்க வேண்டும் என்றும் புதிய இந்தியாவில் வறுமை இருக்காது என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின உரையாற்றினார்.

English summary
On the eve of India’s 71st Independence Day, President Ram Nath Kovind spoke of Prime Minister Narendra Modi’s vision of ‘New India’ and set New India Goals that the nation aims to achieve before 2022, when India completes 75 years of Independence from British rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X