நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது: பிரதமர் மோடி ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிறுமிகள் பாலியல் வன்கொடுமை-பிரதமர் மோடி ஆவேசம்

  டெல்லி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

  Sexual harassment in a civilized country is shameful:PM Modi

  அதாவது காஷ்மீர், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  நமது குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாகரிகமான சமுதாயம் கொண்ட நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் வெட்கக் கேடானவை என்றும் மோடி ஆவேசமாக கூறியுள்ளார்.

  சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் நாட்டிற்கு இதை நான் உறுதி அளிக்கிறேன் என்றும பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேச சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Prime Minister Modi Condemns the rape of Kashmir and UP girls. PM Modi also said angily that sexual harassment in a civilized country is shameful.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற