சித்தராமையாவை கைவிட்ட சாமுண்டேஸ்வரி.. பாதாமியில் ஜஸ்ட் பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சாமுண்டேஸ்வரி பாதாமியில் சித்தராமையா பின்னடைவு..

  பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா பாதாமி சிறு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், சாமுண்டேஸ்வரி தொகுதியில் பெரிய தோல்வியை சந்தித்தார்.

  முதல்வர் சித்தராமையா, மைசூர் தொகுதி சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிட முதலில் தீர்மானித்தார். ஆனால் அங்கு வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும் சித்தராமையா போட்டியிட்டார்.

  Siddaramaiah leads Badami constituency

  இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதும், 2 தொகுதிகளிலுமே சித்தராமையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கவலையடைந்தனர்.

  இருப்பினும பின்னர் பாதாமி தொகுதியில் மட்டும், சித்தராமையா லேசான முன்னிலை வகிக்க ஆரம்பித்தார். எதிர்த்து போட்டியிட்டது, பண பலம் மிக்க, ரெட்டி சகோதரர்களின் நண்பரும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீராமலு என்பதால், அங்கும் கடும் இழுபறி நீடித்தது.

  பாதாமியில் 1696 வாக்குகள் வித்தியாசத்தில் சித்தராமையா வெற்றி பெற்றார். ஆனால், சாமுண்டேஸ்வரி தொகுதியில் 36, 042 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை அவர் சந்தித்தார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Siddaramaiah leads Badami constituency ahead of B.Sriramalu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற