For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தும்மும் குரங்கு... நடக்கும் மீன்...நீலக்கண் தவளை- எல்லாமே நம்ம இமயமலையில் இருக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: இமயமலை கிழக்கு பகுதியில் மழைபெய்யும் போது தும்மும் மூக்கை கொண்ட குரங்கு, நடக்கும் மீன் ,பெண்களின் நகைபோன்ற பாம்பு உள்பட 200 வகை புதிய உயிரினிங்கள் கண்டுபிடிக்கபட்டு உள்ளன.

133 புதிய வகை தாவர இனங்கள், 39 முது கெலும்பற்றவைகள், 26 மீன் வகைகள், 10 நீர் நில வாழ்வன கண்டறியபட்டு உள்ளன. இவைகள் 2009 ஆம் ஆண்டில் இருந்து அங்கு காணப்படுகின்றன.

கடந்த 15 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் 550 புதிய இனங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.இந்த கண்டு பிடிப்புகளில் 3 புதிய காட்டு வாழைப்பழங்கள் இனங்களும் அடங்கும்.

விஞ்ஞானியின் பெயர்:

விஞ்ஞானியின் பெயர்:

இதில் ஒரு வாழைப்பழத்திற்கு பிரபல வாழைப்பழ விஞ்ஞானி மர்க்கி ஹக்கினன் பெயர் முசா மர்க்கி எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இதில் லெப்டோபிரச்சியும் போம்பு எனப்படும் சாம்பல் மற்றும் நீல கருவிழி படலம் கொண்ட கருப்பு தவளை ஆகியவையும் அடங்கும்.

211 புதிய உயிரினங்கள்:

211 புதிய உயிரினங்கள்:

நீல நிற கண்களுடைய தவளை, கொம்புகளுள்ள தவளை, வழக்கத்திற்கு மாறாக அதிக சத்தத்தை கொண்ட பறவை,பாம்புதலைக் கொண்ட மீன், டிராகுலா மீன், அகோரமான மூக்கினை உடைய குரங்கு போன்ற 211 புதிய இனங்களை கடந்த ஆறு வருடங்களில் கிழக்கு இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டன என்று வேர்ட்ல் வைட்லைப் பவுண்டேஷன் கூறியுள்ளது.

வாழ்விட தின ஆராய்ச்சி:

வாழ்விட தின ஆராய்ச்சி:

உலக வாழ்விடம் தினத்தை முன்னிட்டு பூட்டானில் இமயமலையில் மறைந்துள்ளதை பற்றி அறிக்கையில் வெளியிடப்பட்டது. அப்போது, ஆசியாவின் அற்புதம் கிழக்கு இமாலயப் பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வட கிழக்கு இந்திய மாநிலங்களில் அருணாச்சல பிரதேசம், அசாம், சிக்கிம், வட வங்காளம், வடக்கு மியான்மர், நேபால் மற்றும் தெற்கு திபெத் போன்றவை உயிரியல் ரீதியாக வளமான பகுதிகளாகும்.

இமயமலைதான் ஏற்ற இடம்:

இமயமலைதான் ஏற்ற இடம்:

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 34 புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பூமியில் ,கிழக்கு இமயமலை பகுதிதான் உயிரினங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது என்று அறிக்கையில் வெளியிடப்பட்டது.

கொட்டிக் கிடக்கும் உயிரினங்கள்:

கொட்டிக் கிடக்கும் உயிரினங்கள்:

கிழக்கு இமயமலை பிரதேசங்களில், 200 சுற்றுப்புறப்பிரதேசம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் 10,000 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 300 பாலூட்டி இனங்கள், 977 பறவை இனங்கள், 176 ஊர்வன, 105 நீர்நில வாழ்வன மற்றும் 269 நன்னீர் மீன் போன்றவற்றுக்கு இந்த பகுதி தாயகமாக இருந்து வருகிறது.

முக்கியமான நடவடிக்கை தேவை:

மக்கள் தொகை வளர்ச்சி, காடுகளை அழித்தல், சுற்றுச்சூழல் மாசடைதல் போன்றவற்றை அந்த பகுதியில் தடுக்கபட வேண்டும் என்று அறிக்கையில் கூறினர். இதற்காக அரசாங்கம் ஒருமுக்கியமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் நிலையான வளர்ச்சி மற்றும் உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்று இந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

English summary
A monkey that sneezes when it rains and a "walking" fish are among more than 200 species discovered in the fragile eastern Himalayas in recent years, conservation group the World Wide Fund for Nature (WWF) says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X