எந்தெந்த நாடுகளில் கருணை கொலை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது தெரியுமா? #Euthanasia

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்யலாம்..சுப்ரீம் கோர்ட் அதிரடி- வீடியோ

  டெல்லி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சில வகையான கருணை கொலைகளை அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

  தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை கண்ணியமாக மரணிக்க செய்யலாம் என் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து அவரது உயிர் போகச் செய்வதை சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளது.

  இதன் மூலம், சில வகையான கருணைக் கொலைகளை சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ள நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

  டாக்டர்கள் முன்னிலையில்

  டாக்டர்கள் முன்னிலையில்


  கருணைக் கொலை இருவகையாக பிரிக்கப்படுகிறது. அவை ஆக்டிவ் யுதான்சியா மற்றும் பேசிவ் யுதான்சியா என்பதாகும்.
  ஆக்டிவ் யுதான்சியா என்பது, ஒருவரை, விஷ ஊசி போட்டோ அல்லது வேறு முறைகளிலோ, டாக்டர்கள் முன்னிலையில் உடனடியாக சாக அனுமதிப்பதாகும்.

  மருத்துவ உபகரணங்கள் இன்றி

  மருத்துவ உபகரணங்கள் இன்றி

  அதேநேரத்தில், பேசிவ் யுதான்சியா கருணை கொலை என்பது, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் ஒருவரை உயிர் வாழச் செய்வதை தவிர்த்து, அவரது உயிரை, சிறிது நேரத்தில் அகற்றுவதாகும். அதாவது, நோயாளி மரணமடைய வேண்டும் என்பதற்காகவே, அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை நிறுத்துவதாகும். எடுத்துக்காட்டாக நோயாளிகளின் செயற்கை சுவாசக் கருவி இணைப்பை துண்டிப்பதாகும்.

  பல நாடுகளில் அங்கீகாரம்

  பல நாடுகளில் அங்கீகாரம்

  செயற்கை முறையில் உயிர்க்காக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்பைத் துண்டித்து, ஒருவரை சாக விடுவது பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
  பெல்ஜியம், லக்சம்பெர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் ஓரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில் கருணைக்கொலை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதோடு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

  நெதர்லாந்து, பெல்ஜியம்

  நெதர்லாந்து, பெல்ஜியம்

  ஏப்ரல் 2002-ல் உலகின் முதல் நாடாக நெதர்லாந்து கருணைக் கொலையை சட்ட பூர்வமாக்கியது. இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் பெல்ஜியம் கருணைக் கொலைக்கு அனுமதியளித்தது.

  சட்டவிரோதம்

  சட்டவிரோதம்

  அமெரிக்காவில் மருத்துவர்களின் உதவியுடன் கருணைக்கொலை செய்யப்படுவது சட்ட பூர்வமானது. அதேநேரத்தில் இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் கருணைக் கொலை சட்ட விரோதம் ஆகும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Some countries implements Mercy killing. India also joines in the list of countries which permits euthanasia after the Supreme court judgement.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற