For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்கள் வேண்டுமானால் போட்டியிடுங்கள், மகனுக்கு சீட் கேட்காதீர்கள்: ப.சி.-க்கு சோனியா அதிர்ச்சி

By Siva
|

டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது மகன் கார்த்தியை சிவகங்கையில் போட்டியிட அனுமதிக்குமாறு கோரிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்க மறுத்துவிட்டாராம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் கூட்டம் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கார்த்தி

கார்த்தி

கூட்டத்தில் கலந்து கொண்ட ப. சிதம்பரம் தான் போட்டியிட்டு வென்ற சிவகங்கை தொகுதியில் தனது மகன் கார்த்தி போட்டியிட வேண்டும் என்ற தனது விருப்பத்தை சோனியாவிடம் தெரிவித்தாராம்.

சோனியா

சோனியா

அதற்கு சோனியாவோ வேண்டும் என்றால் நீங்கள் சிவகங்கை தொகுதியில் போட்யிடுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். உங்கள் மகனுக்கு எல்லாம் அந்த தொகுதியை கொடுக்க முடியாது என்று கறாராக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது சந்தேகம் தான். இந்த உண்மை தெரிந்த சிதம்பரம் தான் போட்டியிட தயங்கினாலும் மகனை போட்டியிட வைத்து பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளார்.

திமுக

திமுக

காங்கிரஸ் கட்சியும் திமுகவுடன் கூட்டணி வைத்து விடலாம் என்று எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால் திமுக மசியவில்லை. இதையடுத்து தான் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

சிதம்பரம்

சிதம்பரம்

வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ப. சிதம்பரம் போட்டியிட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to sources, congress president Sonia Gandhi rejected P. Chidambaram's demand to field his son Karthi in Sivaganga in the lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X