For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஸ்ரீராம்சேனாவுக்கு தடை- கர்நாடகா அரசு எச்சரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஹிந்து வன்முறை அமைப்பான ஸ்ரீராம் சேனாவுக்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடகா அரசு எச்சரித்துள்ளது.

நாட்டின் மதச்சார்பின்மை கலாசாரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஸ்ரீராம் சேனா அமைப்பை கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என்று நேற்று முன் தினம் கோவா மாநில காங்கிரஸ் வலியுறுத்தியிருந்தது.

இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஸ்ரீராம் சேனா ஈடுபடவில்லை. அப்படி ஸ்ரீராம் சேனா அமைப்பு வன்முறையில் ஈடுபட்டால் அதை தடை செய்வது குறித்து பரிசீலிப்போம் என்றார்.

இந்த எச்சரிக்கை குறித்து பதிலளித்த ஸ்ரீராம் சேனாவின் தலைவர் முத்தலிக், நாங்கள் ஒன்றும் அல்கொய்தாவோ ஜெய்ஷி முகமது அமைப்போ அல்ல.. நாங்கள் ஹிந்து கலாசாரத்தை பின்பற்ற சொல்லுகிற அமைப்பு.. இதில் என்ன தவறு? என்றார்.

English summary
The Karnataka State government is closely monitoring the activities of the Sri Rama Sene and will ban it if it indulges in illegal activities, Home Minister K.J. George has said. This follows a demand by the Goa unit of the Congress to ban the Hindutva outfit in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X