For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவினரின் வன்முறையை பார்த்து வெறுத்துவிட்டேன்- சாமி 'ட்வீட்'

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஜெயலலிதாவை எதற்காக சிறையில் வைக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை அளிக்க அனுமதி கோரி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மீது முதன்முதலில் சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்தவர் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்து அவர் பெங்களூர் பரப்பன அகர்ஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவை சிறையில் அடைத்த உடன் அதிமுகவினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.

திமுக தலைவர் கருணாநிதி, பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்தனர். சென்னையில் உள்ள சாமியின் வீட்டை தாக்கினர்.

விடமாட்டேனே

ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே வர விட மாட்டேன் என்று சாமி தெரிவித்தார். இதனால் அதிமுகவினர் அவர் மீது கடும் கோபம் கொண்டனர்.

மனு

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் சாமி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கருத்து

மனுதாரர் என்ற முறையில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று சாமி புதிய மனுவில் தெரிவித்துள்ளார்.

சாமி

சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எதற்காக ஜெயலலலிதா சிறையில் இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை அளித்து விளக்க அனுமதி கோரி நான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். வன்முறை சம்பவங்களை பார்த்து வெறுத்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

English summary
BJP leader Subramanian Swamy tweeted that, 'I have filed an Application in SC seeking to adduce arguments as to why JJ should remain in jail. I am fed up with the attempted violence.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X