நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது.. முன்னாள் அட்டர்னி ஜெனரல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாக இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்று அவர்கள் குற்றம்சாட்டினர். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது என்றும் அவர்கள் கூறினர்.

நீதிபதிகள் குற்றச்சாட்டு

நீதிபதிகள் குற்றச்சாட்டு

இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்றும் தெரிவித்தனர். மேலும் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடு சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் பரபரப்பு குற்றம்சாட்டினர்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் கருத்து

ஓய்வுபெற்ற நீதிபதிகள் கருத்து

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளின் குற்றச்சாட்டால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதிகள் தங்களுக்குள்ளேயே பிரச்சரனையை பேசி தீர்த்திருக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைமை நீதிபதியிடம்..

தலைமை நீதிபதியிடம்..

இந்நிலையில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் தான் சென்றிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம் அளிக்கிறது

ஏமாற்றம் அளிக்கிறது

நீதித்துறையில் பிளவு ஏற்படக்கூடாது என்றும் அவர் தெரிவத்தார். நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former attorney general soli sorabjee has said the judges should have gone to the Chief Justice. He also said that the division of justice should not be split. Attorney General Soli Sorabjee said the judges meeting with press is dissappointing.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற