For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா : ஜனாதிபதி, பிரதமர் மலர் தூவி மரியாதை

விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : சுவாமி விவேகானந்தரின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் விவேகானந்தரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுவாமி விவேகானந்தரின் 155 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இளைஞர்களின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த அவர் சொன்ன 'நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள், இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்று அவர் சொன்ன வாக்கியம் மிகப்பிரபலம்.

Swami Vivekanandha 155th Birthday Celebrations in India

நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர் சக்தி மிகவும் முக்கியம் என்று எடுத்துரைத்த அவரது பிறந்தநாள் நாடு முழுவதும் கடந்த 1984ம் ஆண்டில் இருந்து தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 'இன்றைய தினம் நாம் அனைவரும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூரவேண்டும். அவர் போற்றத்தக்க ஒரு அறிஞர், துறவி மற்றும் தேசத்தை உருவாக்கியவர். தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். தேசிய இளைஞர் தினமான இன்று, புதிய இந்தியாவை கட்டமைக்கும் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உற்சாகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்' என கூறியுள்ளார்.

English summary
Nation celebrates Swami Vivekananda's 155th Birthday today. Swami Vivekananda's Birthday is being celebrated as National Youth Day Since 1984 and President Ramnath Kovind, PM Modi paid their homage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X