இப்படியும் ஒரு சாமியாரா? தனது காரில் சிக்கி வாலிபர் மரணமடைந்ததால் தற்கொலை செய்த சாமியார்!
ஹாவேரி: தனது கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானதால், மனம் வருந்திய சாமியார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
ஹாவேரி மாவட்டம், கனகல் தாலுகாவிலுள்ள ஹுல்லட்டி கிராமத்தில் நற்பணிகள் செய்ய திங்கலேஷ்வர் மடத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவர் மகந்த சுவாமி. கடந்த சில மாதங்களாக அங்கேயே தங்கியிருந்து, மரம் நடுதல் உள்ளிட்ட சமூகசேவைகளை செய்து வந்துள்ளார். மடத்தின் சார்பில் விரைவில் அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டும் பணிகளிலும் இறங்கியுள்ளார்.

கிராமத்தினரும் சுவாமியுடன் அன்புடன் பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, காரை ஓட்டியபடி ஹூப்ளிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் சென்ற நபர் மீது கார் மோதிவிட்டது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த விஷயம் அறிந்த மகந்த சுவாமி, மிகுந்த மனவேதனையடைந்தார். தன்னால் ஒரு உயிர் பறி போய்விட்டதே என்று வருத்தத்தில் ஆழ்ந்தார். இதையடுத்து, சாமியார்களுக்கான மடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. தற்கொலை கடிதத்திலும், நடந்த சம்பவத்தை அவர் விவரித்திருந்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications