For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு...சசி அணிக்கு ஒதுக்கியிருக்க வேண்டும்: சு.சுவாமி

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு... அதை சசிகலா அணிக்குதான் ஒதுக்கியிருக்க வேண்டும் என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:

Swamy slams Election Commission on freeze of ADMK symbol

1971-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தீர்ப்பானது எந்த அணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சின்னம் ஒதுக்க வேண்டும் என்கிறது. அதனடிப்படையில் சசிகலா அணிக்குதான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருக்க வேண்டும்.

சசிகலா அணியில்தான் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓபிஎஸ் அணியில் எம்.எல்.ஏக்களே இல்லை.

இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறானது என்றுதான் சொல்வேன். இரட்டை இலையை முடக்க பாஜக நிர்பந்தம் செய்திருந்தால் கண்டிப்பாக எனக்கு அது தெரிந்திருக்கும்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

English summary
BJP Rajya Sabha MP Subramanian swamy has condemned for the freeze of ADMK's Two leaves symbol by the Election Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X