கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரிய எதிர்ப்பை காட்டுவோம்.. புகழேந்தி எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்று சுயேச்சை எம்எல்ஏ தினகரன் ஆதரவாளர் புகழேந்தி எச்சரிக்கைவிடுத்தார்.

டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புகழேந்தி கூறியதாவது: தினகரன் வெற்றிக்காக, வாழ்த்து சொல்ல மனதில்லை என்றால் பரவாயில்லை. திருடன் என்பதும், வாக்காளர்களை பிச்சைக்காரன் என்பதும் சரியல்ல. எங்கள் தலைமையான சசிகலா அல்லது தினகரன் யாராவது உத்தரவிட்டால் கமலை எதிர்த்து பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Pugazhendi warns actor Kamal Hassan

இதனிடையே தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "கமல் எப்படிப்பட்டவர் என்பதை இப்போது மக்கள் புரிந்து கொண்டனர்" என்றார். கமல் கருத்தால், தினகரனை சார்ந்தவர்களும் தினகரனும் மிகுந்த பதற்றத்தில் உள்ளதாகவே அவர்களின் தொடர் நடவடிக்கைகள் காண்பிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Independent MLA Dinakaran supporter Pugazhendi, warns actor Kamal Hassan, that they will do a big protest if Kamal Haasan does not apologize for his remark on Dinakaran.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X