ஐ.எஸ்.தீவிரவாதிகள் அச்சுறுத்தல்.. தீவிர பாதுகாப்பில் "காதல் சின்னம் "

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை தகர்க்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க காதல் நினைவு சின்னமான தாஜ்மஹால் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இதை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் தேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் வருவது வழக்கம். ஆண்டுக்கு 6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றனது.

 Target Taj Mahal: Security beefed up after IS threat

இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற தாஜ்மஹாலை குறிவைத்து தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியானது. சில படங்களும் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிஆர்பிஎப், துணை ராணுவப் படையினர், போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சில மணி நேரத்துக்கு ஒருமுறை பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகின்றன. தாஜ்மஹால் அருகே வாகன நடமாட்டத்தை அவர்கள் தீவிரமாக கவனித்து வருகிறார்கள். சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் கண்காணித்து வருகிறார்கள். மோப்ப நாய்களை கொண்டும் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The security was beefed up after a website showed graphics of the Taj Mahal with a terrorist standing alongside holding what looked like a weapon.
Please Wait while comments are loading...