For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய ஏர்லைன் துவங்கும் டாடா சன்ஸ்-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் புதிய விமான சேவையை துவங்குகிறது.

டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் சேர்ந்து இந்தியாவில் புதிய ஏர்லைன்ஸை நிறுவ உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அந்த இரண்டு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில் இந்த புதிய கூட்டு முயற்சி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

18 ஆண்டுகளுக்கு முன்பே

18 ஆண்டுகளுக்கு முன்பே

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே டாடா குழுமமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் சேர்ந்து தனியார் ஏர்லைன்ஸை நிறுவத் திட்டமிட்டன. ஆனால் அந்த திட்டம் பரண் மேல் போடப்பட்டது.

ரூ.620 கோடி

ரூ.620 கோடி

இந்த புதிய நிறுவனத்தில் டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேர்ந்து ரூ.620 கோடி முதலீடு செய்கின்றன.

டாடாவுக்கு

டாடாவுக்கு

புதிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸுக்கு 51 சதவீத பங்கும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு 49 சதவீத பங்கும் இருக்கும்.

டெல்லியில்

டெல்லியில்

புதிய ஏர்லைன்ஸ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.

ஒப்புதல்

ஒப்புதல்

இந்த ஏர்லைன்ஸுக்கு ஒப்புதல் கோரி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு சபையிடம் விண்ணப்பித்துள்ளது.

போர்டு உறுப்பினர்கள்

போர்டு உறுப்பினர்கள்

புதிய நிறுவனத்தின் நிர்வாக அமைப்பில் முதலில் டாடா சன்ஸ் நியமிக்கும் 2 பேர் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

தலைவர்

தலைவர்

டாடா சன்ஸால் நியமிக்கப்பட்ட பிரசாத் மேனன் புதிய ஏர்லைன்ஸின் சேர்மனாக இருப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்ஏசியா

ஏர்ஏசியா

இந்தியாவில் குறைந்த விலை விமான சேவை வழங்க டாடா குழுமம் ஏற்கனவே ஏர்ஏசியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமான சேவை வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Eighteen years after its falied attempt, Tata group on thursday joined hands again with Singapore Airlines to start a new full-service airline in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X