விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள் ரசாயன தாக்குதல்- உளவுத்துறை எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடுமுழுவதும் முக்கிய விமானம் மற்றும் ரயில் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொது வாகனங்களில் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:

Terrorists planning chemical attacks on airports, railway stations, warn intel agencies

விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் பொது மக்கள் பயணிக்கும் விமானங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் பொருட்கள் மூலம் விஷ வாயு அல்லது வேதியியல் பவுடர், பூச்சி கொல்லி, ஆசிட், மருத்துவ பொருட்கள், வீடு துடைக்கும் பொருட்கள் மூலம் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மூடப்பட்ட பகுதியில் விஷ வாயவால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது விமானம், பேருந்து, ரயில் பயணிகளுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து இந்தியா முழுதுவம் உள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Intelligence agencies have warned of terror attacks on transport hubs like airports, railway stations, metro trains and bus stops. The Centre has asked states to beef up security at relevant places.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற