For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டுவதாக சொன்னது 6 கோடி கழிப்பறைகள்... கட்டியது வெறும் 62 லட்சம்... ரமணாவாக மாறிய சசிதரூர்!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்த உத்தரவாதம் நிறைவேற்றப்படவில்லை. உறுதி அளித்தபடி 6 கோடிக் கழிப்பறைகள் கட்டப்படவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர், கடந்தவாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொதுபட்ஜெட் குறித்து நாடளுமன்றத்தில் உரையாற்றினார்.

The budget falls short in various aspects, says Shashi Tharoor in Lok Sabha

அப்போது அவர், ‘கடந்தாண்டு பட்ஜெட்டில் இந்தியா முழுவதும் சுமார் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், அவர் கூறியபடி 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படவில்லை. அதற்கு மாறாக வெரும் 62 லட்சம் கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் வெறும் 10 சதவீதம் மட்டுமே ஆகும்' என்றார்.

மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு பலாத்காரம் மற்றும் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான உதவிகளைச் செய்வதில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், தூய்மை இந்தியா திட்டத்திற்கென மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார்.

English summary
Last year Mr. Jaitley promised that 6 crore toilets will be built. Actual achievement is barely 10%, 62 lakh former minister Shashi Tharoor said in Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X