For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனின் அண்ணன் மாதையன் மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

தம்மை விடுதலை செய்யும்படி வீரப்பனின் சகோதரர் மாதையன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தரும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: தம்மை விடுதலை செய்யும்படி வீரப்பனின் சகோதரர் மாதையன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தரும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தனக்கடத்தல் வீரப்பனின் மறைவுக்குப் பின்பாக அவரது உறவினர்கள் மீதுள்ள வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் கவனிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. வீரப்பனின் சகோதரர் மாதையனின் விடுதலை மனுவும் நிலுவையில் இருந்தது.

The supreme court has ordered TN to decide on the petition by veerappan's brother

தற்போது இந்த விடுதலை மனு மீது 4 வாரத்தில் முடிவு எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொலை வழக்கில் மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கீழ் கோர்ட் விதித்து இருந்த இந்த தண்டனையை எதிர்த்தும், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்கவும் கோரி மாதையன் உயர் நீதிமன்றத்தில் மனுதாத்தாக்கல் செய்து இருந்தார். 2015ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட இந்த மனுவிற்கு விரைந்தது நடவடிக்கை எடுக்குக்குமாறு தமிழக அரசுக்கு அப்போது உயர்நிதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீது முடிவு எடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தியது. இதையடுத்து 20 ஆண்டுகாலமாக சிறை தண்டனையை அனுபவித்து வந்த மாதையன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார். தற்போது இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ஏ.எம்.கன்வில்கர்,டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆயுள் தண்டனை கைதிகளுக்கான விசாரணை மற்றும் பரிந்துரை ஆணையம் இவரது மனுவை நிராகரித்த காரணத்தினால் மட்டுமே இவருக்கு விடுதலை வழங்கப்படவில்லை என் தமிழக அரசு வாதாடியது. இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள் 4 வாரத்துக்குள் தகுந்த பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

English summary
The supreme court has ordered tamilnadu goverment to decide on the petition which has filed by veerappan's brother. it need clarification within four weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X