தனிநபர் உரிமையை பாதுகாக்க விர்ட்சுவல் ஐடி.. யுஐடிஏஐ அறிமுகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி தனிநபர் உரிமையை பாதுகாக்க, ஆதார்கார்டு வைத்திருப்பவர்களுக்கு விர்ட்சுவல் அடையாள அட்டை யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆதார்கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணுக்கு பதிலாக யுஐடிஏஐ இணையதள பக்கத்தில் ஒரு அடையாள முகவரியை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விர்ச்ட்சுவல் ஐடியை சிம் கார்டு சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விர்ச்ட்வல் ஐடி

விர்ச்ட்வல் ஐடி

இது அங்கீகாரத்தின் போது பயனாளிகள் தங்களின் ஆதார் எண்ணை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்ற ஆப்ஷனையும் வழங்கும். விர்ச்ட்சுவல் ஐடி ராண்டமாக 16 இலக்க எண்களை கொண்டிருக்கும்.

வரையறுக்கப்பட்ட விவரங்கள்

வரையறுக்கப்பட்ட விவரங்கள்

பயனாளிகள் பயோமெட்ரிக்ஸுடன் சேர்ந்து ஒரு மொபைல் நிறுவனத்தை போன்று பெயர், முகவரி மற்றும் புகைப்படம் போன்ற வரையறுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே போதுமானதாக எடுத்துக்கொள்ளும்.

தானாக ரத்தாகிவிடும்

தானாக ரத்தாகிவிடும்

ஒரு பயனாளி பல விர்ட்ச்சுவல் ஐடிகளை உருவாக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ஐடி உருவாக்கப்பட்டவுடன் பழைய ஐடி தானாக ரத்தாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்

யுஐடிஏஐ 'வரையறுக்கப்பட்ட KYC' என்ற முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், ஒரு குறிப்பிட்ட சேவை வழங்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பயனாளிக்கும் வரையறுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1முதல் ஏற்றுக்கொள்ளும்

மார்ச் 1முதல் ஏற்றுக்கொள்ளும்

இந்த விர்ட்சுவல் ஐடி ஒரு தற்காலிக மற்றும் திரும்பப்பெறக்கூடிய 16 இலக்கமுடைய சீரற்ற எண்ணாக இருக்கும். இதனை ஆதார் எண் மற்றும் ஆதார் வழங்கும் நிறுவனம் மார்ச் 1, 2018 முதல் ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் கட்டாயமாக்கப்படும்

ஜூன் முதல் கட்டாயமாக்கப்படும்

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், தங்கள் பயனர்களிடமிருந்து அனைத்து நிறுவனங்களும் விர்ட்சுவல் ஐடி அங்கீகாரத்தை பெற கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
The UIDAI introduced a new concept of ‘Virtual ID’ which an Aadhaar-card holder can generate from its website and give for various purposes, including SIM verification, instead of sharing the actual 12-digit biometric ID.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற