கர்நாடகா தேர்தல் கருத்து கணிப்பு: 35 ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சி மீது அதிருப்தி இல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா தேர்தல் கருத்து கணிப்பில் 35 ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதையே கருத்துகணிப்புகள் காட்டுகின்றன.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக , காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் போட்டிப் போட்டிக் கொண்டு தங்கள் நிறைகள் குறித்தும் எதிர்க்கட்சிகளின் குறைகள் குறித்தும் வெளிப்படுத்தினர்.

மொத்தம் 222 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கு வரும் 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதுதான் மரபு

இதுதான் மரபு

பொதுவாக பெரும்பாலான மாநிலங்களில் ஆளும் கட்சி மீது மக்களுக்கு ஏதேனும் அதிருப்தி நிலவும். அதனால் அடுத்து வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பதிலாக எதிர்க்கட்சிக்கே மக்கள் வாக்களித்து ஆட்சி அமைக்க வழிகோலுவர். இதுதான் மரபு.

கலைப்பு

கலைப்பு

1983-ஆம் ஆண்டு ஜனதா கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணா ஹெட்ஜே ஆட்சி செய்தார். அதன் பின்னர் எஸ் ஆர் பொம்மை ஆட்சி நடைபெற்றது. இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி நடந்ததால் அப்போதைய ஆட்சி கலைக்கப்பட்டது.

மாற்றம் ஏற்பட்டது

மாற்றம் ஏற்பட்டது

1989-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரேந்திர பாட்டீல் ஆட்சி நடைபெற்றது. அதன்பிறகும் ஜனாதிபதி ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி என ஆட்சி நடைபெற்றது. கடந்த 1994-ஆம் ஆண்டு ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்றது. அதன்பிறகு, மதசார்பற்ற ஜனதா தளம், பாஜக என மாறி மாறி ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

எக்சிட் போல் மற்றும் ப்ரீ போல்

எக்சிட் போல் மற்றும் ப்ரீ போல்

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும் சரி பிந்தைய கருத்து கணிப்புகளிலும் சரி காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையை பெறாவிட்டாலும் பெரும்பான்மையை பெரும் என்றே கணிக்கப்பட்டன. அது போல் காங்கிரஸ் கட்சிக்கு 70 முதல் 90 இடங்கள் கிடைக்கும் என்று சராசரியாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

35 ஆண்டுகள் கழித்து...

35 ஆண்டுகள் கழித்து...

இது ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதையே காட்டுகிறது. சித்தராமையா அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையவில்லை என்பதையும் காட்டுவதாக கருத்து கணிப்புகள் அமைந்துள்ளன. சுமார் 35 ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சிக்கு மக்கள் ஓரளவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In 35 years, there will be no disappointment in Siddaramaiah government in Karnataka.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற