For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செத்தாலும் சாவேனே தவிர, சொந்த மக்களை கேவலமாக பேசமாட்டேன்.. தருண் விஜய் நீலிக் கண்ணீர்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நான் செத்தாலும் சாவேனே தவிர எனது சொந்த மக்களை அசிங்கமாக பேச மாட்டேன் என பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

கென்ய நாட்டை சேர்ந்த இளைஞர் இந்தியாவில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளித்த பேட்டியொன்றில், இந்தியர்கள் நிறவெறி கொண்டவர்கள் கிடையாது. இத்தாக்குதல் அதற்காக நடந்திருக்காது என தருண் விஜய் விளக்கம் அளித்தார்.

அப்போது இந்தியாவில் பல்வேறு நிறம் கொண்ட மக்கள் வாழ்கிறோம். தென் இந்தியாவில் கறுப்பு நிறம் அதிகம். அதற்காக நாங்கள் விரோதம் பாராட்டவில்லையே என்று தனது பேச்சுக்கு நியாயம் சேர்த்தார்.

 கண்டனம்

கண்டனம்

ஆனால் இவ்வாறு பேசியது தென் இந்தியர்களை கறுப்பினர்ததவர்களோடு ஒப்பிடுவதை போல உள்ளது என்று தென் இந்தியாவை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

 கேவலப்படுத்த மாட்டேன்

கேவலப்படுத்த மாட்டேன்

ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தருண் விஜய், நான் செத்தாலும் சாவேனே தவிர, எனது நாட்டின் சொந்த கலாசாரம், சொந்த மக்களையும், சொந்த நாட்டையும் பற்றி குறைவாக பேச மாட்டேன். எனது பேச்சை தப்பாக சித்தரிக்கும் முன்பாக கொஞ்சம் யோசியுங்கள். எனது பேச்சு புண்படுத்திவிட்டதாக நினைப்பவர்களுக்கு எனது மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

 இனவெறிக்கு எதிரான இந்தியா

இனவெறிக்கு எதிரான இந்தியா

நாங்கள் இனவெறிக்கு எதிராக போராடியுள்ளோம், எங்களிடம் பல்வேறு கலாசாரம், வண்ணம் கொண்ட மக்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவில் இனவெறி என்பது கிடையாது. எல்லோரும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்றுதான் நான் பேட்டியில் தெரிவித்தேன். இவ்வாறு தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

 செக்கச் செவப்பு

செக்கச் செவப்பு

இதனிடையே திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், எங்கள் தலைவர் கருணாநிதி கறுப்பு கிடையாது, மறைந்த ஜெயலலிதா கலரானவர். தென் இந்தியாவின் அனைத்து மக்களும் கறுப்பு கிடையாது என தெரிவித்தார்.

 அந்த கண்ணனே கார்மேக வண்ணன்தான்

அந்த கண்ணனே கார்மேக வண்ணன்தான்

சோஷியல் மீடியா பிரபலம் கே.எஸ். கிரண் வெளியிட்டுள்ள கருத்தில், பகவான் கிருஷ்ணர் கறுமை நிறமானவர். அவரை அழகன் என புராணங்கள் புகழ்கின்றன. நானும் கறுப்பு நிறம் கொண்ட தென் இந்தியன் என்பதில் பெருமைதான். இதுதான் எனது இயல்பான நிறம். ஆயிரமாயிரம் வருடங்களாக இந்த மண்ணில் வாழும் எனது மூதாதையர்களின் வண்ணம்தான் எனக்குள்ளது என்று தெரிவித்தார்.

English summary
Tarun Vijay however issued a clarification in which he said, "Feel bad, really feel sorry, my apologies to those who feel I said different than what I meant. "I feel the entire statement was this; we have fought racism and we have people with different colour and culture, and still never had any racism."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X