"ஸ்ரீராமர் ஒரு இந்துவே இல்லை.. அவர் ஒரு முஸ்லீம்.." திரிணாமுல் தலைவர் சர்ச்சை.. பாய்ந்து வந்த பாஜக
கொல்கத்தா: ராமர் இந்துவே இல்லை அவர் ஒரு முஸ்லீம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவரது பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பாஜகவினர் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். வேண்டும் என்றே திரிணாமுல் கட்சியினர் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதாக பாஜக சாடியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாகத் திரிணாமுல் காங்கிரஸ் இருக்கிறது. அந்த மாநிலத்திற்கும் தமிழகத்துடனேயே அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்கு நடக்கும் ஒவ்வொரு சிறிய விஷயங்களும் முக்கியமானதாக மாறுகிறது. ஒவ்வொரு பேச்சை வைத்தும் அரசியல் நடந்து வருகிறது.

திரிணாமுல் எம்எல்ஏ
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ராவின் பேச்சு இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது கடவுள் ராமர் இந்து இல்லை.. அவர் ஒரு முஸ்லீம் என்று மதன் மித்ரா பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சைக் கண்டித்துள்ள பாஜக, இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் மதன் மித்ரா பேசியுள்ளதாகவும் அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் பாஜக சாடியுள்ளது.
அந்த வீடியோவில் மதன் மித்ரா பெங்காலி மொழியில் பேசுகிறார். இந்து மந்திரங்களைச் சொல்லும் மதன் மித்ரா, பாஜகவினர் இந்து மதத்தின் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாமல் பேசுவதாகச் சொல்லி விமர்சிக்கிறார். இந்து மதத்தைப் புரிந்து கொள்ளாத பாஜகவினர், அதை வைத்து மக்களைப் பிரித்துப் பிரிக்க முயல்வதாக அவர் சாடினார்.
ராமரின் குடும்பப் பெயர்
காமார்ஹாட்டி தொகுதி எம்.எல்.ஏ. மித்ரா இது குறித்து மேலும் பேசுகையில், "ஒரு முறை மூத்த பாஜக தலைவர் உட்படப் பலரும் உரையாடிக் கொண்டு இருந்தோம். அப்போது ராமர் இந்து என்பதை நிரூபிக்க முடியுமா எனக் கேட்டேன். அவர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தனர். ராமரின் குடும்பப்பெயர் (சாதிப் பெயர்) என்ன என்று கேட்டபோது யாருக்கும் பதில் தெரியவில்லை.. சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜக. தலைவர்கள் எனது கேள்வியால் திணறிப் போனார்கள்.
ராமர் ஒரு முஸ்லீம்
பிறகு ஒரு நாள் ராமரின் குடும்பப்பெயர் "ராம்தேத்மலானி" என்று சந்நியாசி ஒருவர் என்னிடம் கூறினார். எந்த இந்துவாவது இதை நம்புவாரா? இதை எல்லாம் வைத்துத் தான் நான் ராமர் இந்து இல்லை என்கிறேன். துணிச்சலாகவே சொல்கிறேன். நான் சொல்வதை நாடு முழுக்க இதைப் பரப்பலாம்.. விவாதம் நடத்தலாம். எனக்கு எந்தவொரு அச்சமும் இல்லை.. பாஜக என்ன செய்துவிடுவார்கள்? என்னைத் தாக்கிவிடுவார்களா.. எனக்குப் பயம் இல்லை. நடப்பது நடக்கட்டும். கடைமை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதாசாரத்தையே நான் பின்பற்றுகிறேன்" என்றார்.
பாய்ந்து வந்த பாஜக
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகியுள்ள நிலையில், இதைப் பாஜகவினர் கடுமையாகச் சாடி வருகிறார்கள். இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, "திரிணாமுல் எம்எல்ஏ மதன் மித்ரா, ஸ்ரீராமர் ஒரு முஸ்லீம், இந்து அல்ல என்கிறார். இந்து மத உணர்வுகளுக்கு எதிராக அவர் வேண்டும் என்றே இதுபோல பேசியுள்ளார். திரிணாமுல் கட்சி திட்டமிட்டு இந்து நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்துகிறது" என்றார்.
அதேபோல மேற்கு வங்க பாஜகவின் ட்விட்டர் கணக்கில், "திரிணாமுல் தலைவர்கள் இந்து கடவுள்களையும், நம்பிக்கைகளையும் தொடர்ந்து அவமதிக்கின்றனர். ராமர் முஸ்லீம், இந்து அல்ல என்கிறார் மதன் மித்ரா.. இது தற்செயலானது இல்லை.. திட்டமிட்டே இதுபோல செய்கிறார்கள்" என்றார்.
விளக்கம்
இந்த வீடியோ பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாகத் திரிணாமுல் எம்எல்ஏ மித்ரா விளக்கமளித்துள்ளார். தான் அதுபோல பேசவில்லை என்றும் ஏஐ மூலம் தனது வீடியோ மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் மித்ரா கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications