For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் திமுக அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

By Mathi
Google Oneindia Tamil News

former dmk minister kn nehru raghupathi periyasamy
டெல்லி: முன்னாள் திமுக அமைச்சர்கள் மூவர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு, மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் 1996-2001 ஆண்டுகளில் நடந்த தி.மு.க. ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி ஆகியோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, முன்னாள் அமைச்சர்களை விடுவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஜே.எஸ்.கேகர் ஆகியோர் கொண்ட பெஞ்ச், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி ஆகியோர் விளக்கம் அளிக்குமாறு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

English summary
Tamilnadu Govt has filed appeal pettition in Supreme Court challenging the acquittal of former Ministers K.N. Nehru of Tiruchi, I. Periasamy of Dindigul, S. Raghupathy of Pudukottai, from DA cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X