For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரட்டாசி மாத பிறப்பு: ஏழுமலையானை தரிசிக்க படையெடுத்த தமிழக பக்தர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

TN devottees throng Tirupathi temple
திருப்பதி: புரட்டாசி மாதம் பிறந்துள்ளதை ஒட்டி திருமலை வெங்கடாசலபதி ஆலயத்தில் தமிழக பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தர்ம தரிசனத்திற்கு 28 மணிநேரம் ஆவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் திருப்பதியில் இருந்து திருலைக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ் போக்குவரத்து முழுமையாக இல்லாததால் திருமலைக்கு பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது

இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று புரட்டாசி மாதம் பிறந்தது. இது பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் ஏழுமலையான் கோவிலில் தமிழக பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. புதனன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடினார்கள்.

தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் ஆகிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் திவ்ய தரிசனத்துக்கு 14 மணி நேரமும் ஆனது. இன்றும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தலை முடி ஏலம் மூலம் கோவிலுக்கு ரூ.24 கோடி வருமானம் கிடைத்ததாக கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசராவ் கூறினார்.

புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு கருட சேவை உலா நடக்கிறது. பிரமோற்சவத்தின் போது நடப்பது போல மிக விமர்சியாக இன்றைய கருட சேவையை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Thousands of Tamil Nadu devottees are thronging Tirupathi temple on the eve of Purattasi month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X