வேலை கெடக்குது வேலை: முதலில் இந்த விளம்பரத்தை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: திருநங்கை ஒருவர் ஆதரவில்லா சிறுமியை தனது சொந்த மகள் போன்று பாசமாக வளர்ப்பது குறித்த விளம்பரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மும்பையை சேர்ந்தவர் கவுரி சாவந்த்(37). திருநங்கை மற்றும் சமூக ஆர்வலர். பாலியல் தொழிலாளியான அவரது தோழி எய்ட்ஸ் நோயால் மரணம் அடைய அவரின் 6 வயது மகள் காயத்ரி ஆதரவில்லாமல் அனாதையானார்.

ஆனால் கவுரியோ காயத்ரியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சொந்த மகள் போன்று பாசம் காட்டி வளர்த்து வருகிறார். இதை தான் விக்ஸ் விளம்பரத்தில் அருமையாக காண்பித்துள்ளனர். கவுரியால் சட்டப்படி காயத்ரியை தத்தெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரத்தில் கவுரியும், நிஜ காயத்ரியும் நடித்துள்ளனர். விளம்பரத்தை பார்ப்பவர்களுக்கு கண்ணில் நீர் வருவதுடன், புல்லரிக்கிறது. மார்ச் 31ம் தேதி ஆன்லைனில் வெளியான இந்த வீடியோவை 90 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

காயத்ரி

காயத்ரியை டாக்டராக்கிப் பார்க்க விரும்புகிறார் கவுரி. காயத்ரியோ தனது தாய் போன்று உள்ள திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராட வழக்கறிஞராக விரும்புகிறார்.

சசி தரூர்

விக்ஸ்இந்தியாவுக்காக திருநங்கைகளின் உரிமை குறித்த அருமையான குறும்படம் https://youtu.be/7zeeVEKaDLM. ஆனால் விக்ஸ் பாட்டில் இல்லாமல் என சசி தரூர் ட்வீட்டியுள்ளார்.

தாய்மை

அருமையான விளம்பரம். தாய்மைக்கு பாலினம் இல்லை #sheshermother Vicks - Generations of Care #TouchOfCare

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vicks India advertisement highlighting transgender rights has got the attention of many.
Please Wait while comments are loading...