முடியுமா.. ரஜினி போல ஸ்டைல் போஸ் கொடுத்த டோணி!
ராஞ்சி: கபாலி பட பாதிப்பிலிருந்து இன்னும் இந்தியாவின் பல பகுதிகள் மீண்டு வரவில்லை போலும். இந்திய கேப்டன் டோணி, கபாலி ரஜினி போல ஸ்டைலாக உட்கார்ந்து போஸ் கொடுத்து அது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராமில் இந்தப் புகைப்படத்தைப் போட்டுள்ளார் டோணி. அதில், நமது ஒரே தலைவர் ரஜினியைப் போல போஸ் கொடுக்க முயற்சித்தேன் என்றும் அடக்கமாக கூறியுள்ளார் டோணி. தன்னை ஒரு தீவிர ரஜினிகாந்த் ரசிகராக கூறியுள்ளார் டோணி,

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலாய் மொழியில் வெளியாகி சக்கை போடு போட்ட கபாலி. இப்படத்தின் வசனங்களும், ரஜினியின் இயல்பான நடிப்பும், பா.ரஞ்சித்தின் சமரசம் செய்து கொள்ளாத இயக்கமும் அனைத்துத் தரப்பையும் கவர்ந்திழுத்ததோடு படத்தையும் மிகப் பெரிய ஹிட்டாக்கியது நினைவிருக்கலாம்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!