For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தரகாண்டில் மேகத்திரள் வெடிப்பு: 6 பேர் பலி, வீடுகள் அடித்து செல்லப்பட்டன

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகத்திரள் வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி வருகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. தெக்ரி மாவட்டத்தில் கனமழையினால் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. 8 வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் அதிகமான மக்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உத்தரகாசியிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

English summary
Six persons were buried under flash flood triggered muck that came down crashing upon Nauthana village of Ghansali tehsil, nearly 60 kilometers away from district headquarter Tehri in Uttarakhand on Thursday wee hours. Incident occurred at 2 am in the night. Among deceased were two children as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X