For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தரகாண்ட்.. பாஜக ஆட்சிக்கு சிக்கல்.. வெற்றிக்கு மிக அருகில் காங்கிரஸ்.. ஜீ நியூஸ் பரபர கணிப்பு!

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் மிக கடுமையான போட்டி நிலவும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு இங்கு கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்று ஜீ செய்தி நிறுவனம் நடத்திய Janta Ka Mood கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு உள்ள 70 தொகுதிகளில் பாஜக 57 இடங்களில் வென்று ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு பெரும்பான்மை பெற 36 இடங்கள் தேவை.

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்க உள்ளது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப், உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக உத்தரகாண்ட் மிக முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகிறது.

உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் யோகி அயோத்தி தொகுதியில் போட்டி?.. பாஜகவின் மாஸ்டர் பிளான் உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் யோகி அயோத்தி தொகுதியில் போட்டி?.. பாஜகவின் மாஸ்டர் பிளான்

ஜீ செய்தி கணிப்பு

ஜீ செய்தி கணிப்பு

இந்த நிலையில் உத்தரகாண்ட் தேர்தலுக்கான கருத்து கணிப்புகளை ஜீ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. Janta Ka Mood கருத்து கணிப்பில், உத்தரகாண்டில் கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் 35 இடங்களை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது பெரும்பான்மைக்கு குறைவாக 1 இடம் பெரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பாஜக உத்தரகாண்டில் 33 இடங்கள் வெல்லும் என்று கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் வேட்பாளர் யார்?

முதல்வர் வேட்பாளர் யார்?

அங்கு முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் மக்கள் விரும்ப கூடிய முதல்வர் வேட்பாளர் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டை குமன், கார்வால் என்று இரண்டு மண்டலங்களாக பிரித்து இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் கார்வால் மண்டல கணிப்பு - இங்கு 41 தொகுதிகள் உள்ளது

பாஜக 22-24 ( 23 இடங்கள் பெறலாம்)

காங்கிரஸ் 15-17 ( 16 இடங்கள் பெறலாம்)

ஆம் ஆத்மி 0-1 ( 1 இடம் பெறலாம்)

மற்றவர்கள் 0-1 (1 இடம் பெறலாம்)

உத்தரகாண்ட் குமன் மண்டல கணிப்பு - இங்கு 29தொகுதிகள் உள்ளது

பாஜக 9-11 (10 இடங்கள் பெறலாம்)

காங்கிரஸ் 18-20 (19 இடங்கள் பெறலாம்)

ஆம் ஆத்மி 0-1 (0)

மற்றவர்கள் 0 (0)

முதல்வர் வேட்பாளர் கணிப்பு ஜீ செய்தி

முதல்வர் வேட்பாளர் கணிப்பு ஜீ செய்தி

முதல்வர் ஆகும் தகுதி கொண்டவர்கள்

கார்வால் மண்டல கணிப்பு

புஷ்கர் சிங் தாமி (BJP) 23 %

ஹரிஷ் ராவத் (CONG) 43 %

அணில் பலூனி BJP) 17 %

அஜய் கொத்தியால் ( AAP) 8%

மற்றவர்கள் 09 %

குமன் மண்டலம் எப்படி?

குமன் மண்டலம் எப்படி?

குமன் மண்டல கணிப்பு

புஷ்கர் சிங் தாமி (BJP) 26 %

ஹரிஷ் ராவத்(CONG) 41 %

அணில் பலூனி (BJP) 14 %

அஜய் கொத்தியால் (AAP) 10 %

மற்றவர்கள் 9 %

English summary
Uttarakhand assembly election 2022: Congress may get more seats than BJP says Zee News polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X