For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசுவ இந்து பரிஷத்தின் மூத்தத் தலைவர் கிரிராஜ் கிஷோர் காலமானார்: பிரதமர் இரங்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: விசுவ இந்து பரிஷத்தின் மூத்தத் தலைவர் கிரிராஜ் கிஷோர் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 94.

விசுவ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரிராஜ் கிஷோர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்தார். பல ஆண்டுகளாக அவர் சக்கர நாற்காலியில் தான் பயணித்து வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு 9.15 மணியளவில் டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள பரிஷத்தின் தலைமை அலுவலகத்தில் அவரது உயிர் பிரிந்தது.

VHP leader Giriraj Kishore dies at age of 94

மூத்தத் தலைவர்...

தனது சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்த கிரிராஜ் கிஷோர், அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரானார்.

ராமர் கோவில் போராட்டம்...

ராமர் கோவில் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட கிரிராஜ், சமீபத்தில் தனது உடலை தானமாக எழுதிக் கொடுத்திருந்தார்.

சொந்த வாழ்க்கை...

தனது கொள்கைகளுக்காகவே வாழ்ந்த கிரிராஜ், திருமணமே செய்து கொள்ளவில்லை. பரிஷத்தின் தலைமை அலுவலகத்திலேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி இரங்கல்...

கிரிராஜ் கிஷோர் மறைவுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். ‘தாய் நாட்டிற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் கிரிராஜ் கிஷோர்' என மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

English summary
Senior Vishwa Hindu Parishad leader Giriraj Kishore, who was actively associated with the Ram temple agitation, died on Sunday evening following prolonged illness. He was 94.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X