சிறையில் சசிகலா விதிமீறலை அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரகசிய விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரு மத்திய சிறையில், நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, வினய்குமார் தலைமை யிலான குழுவினர், முன்னாள் டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், மற்றும் போக்குவரத்து துறை கமிஷனர் ரூபாவிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

சசிகலா உள்ளிட்ட விஐபிகளுக்கு சலுகைகள் காட்டப்பட்டதாக ரூபா சிறைத்துறை டிஐஜியாக இருந்தபோது கொடுத்த அறிக்கை புயலை கிளப்பியது.

Vinay Kumar inquires Roopa over Bangalore jail alligation

இதையடுத்து, சிறை முறைகேடு கள் பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ். அதி காரி, வினய்குமார் தலைமையில், அரசு, விசாரணை கமிஷன் அமைத்தது. விசாரணை குழு ஏற்கனவே சிறையில் ஆய்வு செய்தது. பின்னர் இக்குழுவினர், ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி., ரூபா ஆகியோரை, ரகசிய இடத்துக்கு வரவழைத்து, தனித்தனியாக விசாரணை நடத்தி, விபரங்கள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ரூபா மருத்துவமனையில் அனுமதி | MP Roopa Ganguly admitted in hospital - Oneindia Tamil

இருவரிடமும் விசாரணை நடத்தி, தகவல்களை பதிவு செய்து கொண்ட, விசாரணை கமிஷன் அதிகாரிகள், சிறை கண்காணிப் பாளர் களாக இருந்த, கிருஷ்ண குமார், அனிதா விடம் விசாரணை நடத்த தயாராகி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Roopa exposed alleged bribe by AIADMK chief V K Sasikala to jail officials. The allegations being probed by retired IAS officer Vinay Kumar.
Please Wait while comments are loading...